ஜனநாயகத்தின் குரலை அடக்கிவிட முடியாது – கனிமொழி கண்டனம்
தி.மு.க எம்.பி கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில், “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், விமானத்திற்குள்ளேயே வைத்து சி.ஜே.பி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே தடுத்து வைக்கப்பட்ட செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
45 மெட்ரோ நிலையங்களை மூடியும், 250-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்தும், இணையச் சேவையைத் துண்டித்தும், 25,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் குவித்தும், அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலில் டெல்லியை ஒரு கோட்டையாக மத்திய அரசு மாற்றியுள்ளது. ‘பாதுகாப்பு’ என்ற காரணத்தைக் காட்டி, அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவின் கீழ் உள்ள உரிமைகளை மீறுவதை ஏற்க முடியாது. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை என்றால், பிறகு ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பதுதான் என்ன?
அபிஜீத் திப்கே உள்ளிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை அடக்கிவிட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




