--- --:--:-- --

ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம்!

9

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடந்த முறைக்கேடு தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டதையடுத்து கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி சனிக்கிழமை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற மாணவர் அமைப்பின் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக திரண்டிருந்தனர்.

 

 

ஏ.ஐ.ஒய்.எஃப் மாநிலச் செயலாளர் கே. பாரதி மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப் மாநிலத் தலைவர் கே. இப்ராஹிம் ஆகியோர் தலைமையில், அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் கூடிய போராட்டக்காரர்கள் சிவானந்தா சாலை வழியாக செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 

 

இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், அவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரியும், வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

 

 

தொடர்ந்து காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக காவல் வாகனங்களில் ஏற்றி, ஒரு சமூகக் கூடத்தில் அடைத்து வைத்தனர். இந்த தள்ளுமுள்ளுவின் போது, மயிலாப்பூரைச் சேர்ந்த கவின் என்ற போராட்டக்காரருக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon