--- --:--:-- --

ஸ்ரீரங்கம் பகுதியில் பன்றிகள் தொல்லை

6

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலம் – 1 நான்காவது வார்டு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ராகவேந்திரா கார்டன் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், அப்பகுதியில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிலர் விபத்துகளிலும் சிக்கி உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதார அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், “கொசுக்களையும், டெங்குவையும் ஒழிப்போம் என்று தெரு தெருவாக சென்று மாநகராட்சி வார்டு பகுதியில் ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையர் பன்றிகளின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் 4-வது வார்டு ராகவேந்திரா கார்டன் தெருவில் பன்றிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இது சம்பந்தமாக ஸ்ரீரங்கம் ‌ சுகாதார அலுவலரிடம் புகார் தெரிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon