--- --:--:-- --

மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

4

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டலம் இந்திய கடற்படை முகாம் சார்பில் இந்திய கடற்படை வீரர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாக்ஜலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடலில் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படும்.

 

 

இதில் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் குந்துகால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அக்டோபர் 12-ம் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திய கடற்படையினரால் சிறிய ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

 

 

இதனால் மண்டபம் இந்திய கடற்படை அலுவலகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பயிற்சி நடைபெறும் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

பாம்பனில் இருந்து ஜந்து நாட்டிக்கள் தூரத்திற்கு யாரும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon