--- --:--:-- --

த.வெ.க-வின் கூட்டணி அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் : திருமாவளவன் வாழ்த்து

13

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் த.வெ.க வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் பெற்றுள்ள வெற்றி, இக்கூட்டணிக்கும் ‘கூட்டணி அரசு’ என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் மகத்தான நிலைப்பாட்டிற்கும் மக்கள் அளித்த அங்கீகாரம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த பொதுத்தேர்தலில் வாய்ப்பை இழந்த இரு தொகுதிகளிலும் இம்முறை தவெக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வி.சி.க அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் களப்பணியாற்றிய விசிக தோழர்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

 

மேலும், கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி வாகை சூடிய வேட்பாளர்களுக்கும் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய்க்கும் தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon