மதுராந்தகத்தில் தவெக முன்னிலை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே திரண்டிருந்த தொண்டர்கள், முதல்வர் விஜயின் டிரெண்டிங் ஆக்ஷனைப் போல செய்து காட்டியும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தவெக வேட்பாளரின் முன்னிலை நீடித்து வருவதால், தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகளை எதிர்பார்த்து தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




