உருவகேலி செய்தார் : மு.க.ஸ்டாலின் மீது த.வெ.க. புகார்
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து இழிவுபடுத்திப் பேசியதாகத் தவெக வழக்கறிஞர் பிரிவு சார்பில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெண்களைத் துன்புறுத்துதல் தடைச் சட்டம் 1998, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஆகியவற்றின் கீழ் மு.க.ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து, சட்டப்படியான விசாரணையும் தண்டனை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என அப்புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




