எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. . அதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 66.50 ரூபாய் உயர்ந்து 2,983 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 957.50 ரூபாயக தொடர்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




