நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா கண்ணீர் மல்க புகார்..!
தனது சொந்த அக்காவான நடிகை அம்பிகா மீது நடிகை ராதா போலீஸில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகைகளாக வலம்வந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா. இருவரும் உடன்பிறந்த சகோதரிகள். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹசன், பாக்யராஜ், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் இவர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
நடிகை ராதா பிசினஸ்மேன் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சொந்த ஊரான கேரளாவில் செட்டில் ஆகிவிட்டார். அதேநேரம் நடிகை அம்பிகா அண்மைக்காலமாக பொதுமக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் திடீரென தனது அக்கா அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்திருக்கிறார். இருவரும் தனது 46 கோடி ரூபாய் பணத்தை செக் மோசடி மூலம் எடுக்க முயன்றதாக ராதா பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.
புகார் அளித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ராதா, “எனது வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து நான்கைந்து காசோலைகளை திருடப்பட்டு அதில் ரூ. 46 கோடி நிரப்பி அம்பிகா அக்காவின் வங்கி கணக்கில் போடப்பட்டிருக்கிறது. அதற்கான மெசேஜ் வங்கியில் இருந்து வந்தபோது தான் வீட்டில் இருந்த செக் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. வங்கியில் தொடர்புகொண்டு நான் பணம் எடுப்பபதை தடுத்துவிட்டாலும் திரும்ப திரும்ப இதேபோல் அம்பிகா அக்காவின் வங்கி கணக்கில் செக் டெபாசிட் செய்யப்பட்டது.
எனது வளசரவாக்க இல்லத்தை செக் புக் உள்ளிட்டவற்றை வைத்துச் சென்றேன். அக்காவை நம்பாமல் யாரை நம்புவது என வைத்துச் சென்றேன். அவர்கள் இதனை எடுத்தார்களா என்பது தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்திருக்கிறேன். ஒன்றரை வருடமாக அந்த வீட்டில் யாரையும் அவர்கள் விடவில்லை. காசோலையை யார் எடுத்தார்கள், யார் வங்கியில் கொண்டு டெபாசிட் செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அம்பிகா அக்கா பெயரில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதில் எனக்கு எனது தம்பி மல்லிகார்ஜுன் மேல் சந்தேகம் உள்ளது என போலீஸில் கூறியிருக்கிறேன்.
சொத்து பிரிக்கும்போது இந்த வீடு எனக்கு ஒதுக்கப்பட்டது. 2006 முதல் இதனை நான் டெவலப் செய்து வருகிறேன். அந்த வீட்டில் இருந்து செக் திருடப்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட தொகையை பார்த்த உடன் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இது குறித்து அக்காவை பல முறை தொடர்பு கொண்டேன். எனது போனை கூட அவர் எடுக்கவில்லை.” என்று வருத்தத்துடன் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




