இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வீசிய சூறைக் காற்றினால் நெடுந்தீவு அருகே குயிந்தா கடற்கரையில் ஒதுங்கி, இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகக் கரை ஒதுங்கிய இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம், மீனவர்கள் 11 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.50,000 அபராதம் விதித்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. அபராதத் தொகையைச் செலுத்திய பிறகு, அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் தூதரக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
📱 Share on WhatsApp 𝕏 Share on X




