--- --:--:-- --

திருவனந்தபுரம் – தாம்பரம் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

4

திருவனந்தபுரம் மத்திய நிலையத்திலிருந்து தாம்பரத்திற்குப் புதன்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06110) சேவை செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 28 வரையிலும், மறுமார்க்கமாகத் தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06109) சேவை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 29 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நேரம் மற்றும் ரயில் நிறுத்தங்களுடன் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டுப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon