காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 ரிட்டர்ன் – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி முடிவு
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் வகையில் ரிவர்ஸ் வென்டிங் மெஷின்களை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மெஷினில் காலி மதுபாட்டிலை செலுத்தினால், அதற்காக ரூ.10 பணம் திரும்பக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் வென்டிங் மெஷின்கள் அமைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




