சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை: 6-ம் வகுப்புக்கு விலக்களிக்க மத்திய அரசு பரிசீலனை
சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான மும்மொழிக் கொள்கையில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலக்களிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




