தேர்தலுக்குப் பின் கோடி கோடியாகப் பேரம்: ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பரபரப்பு குற்றச்சாட்டு
சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தன்னையும், ஷாஜகானையும் தேடி சிலர் வந்ததாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ சையது ஃபாரூக் பாஷா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கோடி கோடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, கையெழுத்துப் போட்டால் அமைச்சர் பதவி தருவதாக அவர்கள் ஆசை காட்டியதாகத் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித்துறை வேண்டுமா அல்லது போக்குவரத்துத்துறை வேண்டுமா என்று கேட்கும் அளவிற்குத் தங்களுக்கு அமைச்சர் பதவி பேரம் பேசப்பட்டதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




