இனி புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் கிடைக்கும்..!
இந்தியன் ஆயில் நிறுவனத்தின், 10 கிலோ எடை கொண்ட ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ சமையல் எரிவாயு சிலிண்டரை, பதிவு செய்த 4 மணி நேரத்தில் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் தான், பதிவு செய்த 4 மணி நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்க உள்ளது.
எங்கெல்லாம் கிடைக்கும்?: அதன்படி, தமிழகத்தில் கோவை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்’ என்ற பெயரில் புதிதாக, 10 கிலோ எடை கொண்ட ‘காம்போசிட்’ சிலிண்டர் விநியோகத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
4 மணி நேரத்தில் சிலிண்டர் கிடைக்கும்: இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், சிலிண்டர் பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் விநியோகம் கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டது. எப்படி புக் செய்வது?: இந்த சிலிண்டர் தேவைப்படுவோர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




