நெசவுத் தொழிலாளர்களுக்குத் தனி அரசாணை வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழ்நாட்டில் நெசவுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 4 லட்சம் நெசவுத் தொழிலாளர்களின் கூலி முறையை ஒழுங்குபடுத்துவதற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அரசாணை எதுவுமே வெளியிடப்படவில்லை என்று சட்டமன்றத்தில் தே.மு.தி.க எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான கூலி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இதற்கான தனி அரசாணையை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று அவர் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




