தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!
சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ஏற்றம் இறக்கம் என மாறி மாறி இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் குறைந்தும் உயர்ந்தும் விற்பனையானது.
நேற்று (ஆகஸ்ட் 28) காலை தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும் சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே நேற்று மாலை விலை ஏற்றம் கண்டது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,800க்கும் சவரனுக்கு ரூ.1200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,18,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில் தான் மாத மற்றும் வார கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 29) தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.14,505க்கும் சவரனுக்கு ரூ.2360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.12,275க்கும் சவரனுக்கு ரூ.2360 குறைந்து ஒரு சவரன் ரூ.98,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




