பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறு: தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கருத்து
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறானது, என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அயோத்தியிலேயே வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபட்டதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளன. 1857ஆம் ஆண்டுக்கு முன் சர்ச்சைக்குரிய இடத்தில், உரிமைக்கான ஆவணங்களை நிரூபிக்க முஸ்லீம் அமைப்புகள் தவறி விட்டன.
நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பிடம் அயோத்தி நிலத்தை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.





