மீண்டும் உதயநிதி காரில் இ.பி.எஸ்..!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வெளிவந்த நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் புறப்படுவதற்காக வெளியே வந்தார்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை நோக்கிச் சென்று அதில் ஏற முயன்றார்.காரை நெருங்கிய கணத்தில், அது தன்னுடைய வாகனம் அல்ல என்பதையும், அது உதயநிதி ஸ்டாலினுடைய கார் என்பதையும் சட்டென உணர்ந்து சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, உடனடியாகத் தனது சொந்த காரை நோக்கிச் சென்று ஏறினார். இந்தத் திடீர் சம்பவத்தால் தலைமைச் செயலக வளாகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பும் சுவாரசியமும் நிலவியது.
இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டிலும் சட்டமன்றக் கூட்டம் முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏறச் சென்று, பின்னர் சுதாரித்துக் கொண்டு மாறியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது அங்கிருந்தவர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





