கோவை அமிர்தா பல்கலை. பட்டமளிப்பு விழா: தேர்தல் ஆணையர் பங்கேற்பு
கோவை எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யாதீபம் பல்கலைக் கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
அமிர்தா பல்கலைக் கழக முதல்வர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் இதில் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், முனைவர் பட்டம் பெற்ற 120 பேர் சிறப்பு விருந்தினர்களிடமிருந்து நேரடியாக பட்டங்களைப் பெற்றனர். பொறியியல், கலை அறிவியல் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 2197 பேர் இதில் பட்டங்களை பெற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




