ஏரி வேலை செய்யும் மூதாட்டிக்கு ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ் – திருப்பத்தூரில் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள புதூர் படைவேட்டு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏரி வேலை செய்து வாழ்ந்து வரும் ருக்மணி என்ற மூதாட்டிக்கு ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றாட கூலி வேலை செய்து வாழும் நிலையில், கோடிக்கணக்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் மற்றும் வங்கிக் கணக்கு முடக்கம் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் ருக்மணி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




