--- --:--:-- --

அடிக்கடி மின்வெட்டு: சென்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

9

சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

மேலும், ஓ.எம்.ஆர் – ஈ.சி.ஆர் (OMR – ECR) இணைப்புச் சாலைப் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதற்கும் பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon