காலை உணவுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதி மாற்றம்: அரசு ஆணையால் அதிர்ச்சி
பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக அரசாணையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.217 கோடியில், ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல்திட்ட நிதியிலிருந்து ரூ.63.15 கோடியும், பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல்திட்ட நிதியிலிருந்து ரூ.6.11 கோடியும் எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்புத் திட்ட நிதிகள் இவ்வாறு மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்துப் பல்வேறு தரப்பினரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




