--- --:--:-- --

காவிரி ஆற்றில் மணல் குவாரிகளைத் திறக்க திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

6

காவிரி ஆற்றில் 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

 

 

குவாரிகளைத் திறப்பதற்காக மணல் தட்டுப்பாடு போன்ற காரணங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிப்பது இறுதியில் மணல் கொள்ளைக்கே வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon