--- --:--:-- --

நவ.11ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

10

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon