மனநலம் பாதித்த இளம்பெண் ஏர்வாடியில் பலாத்காரம் ! 7 பேரிடம் போலீசார் விசாரணை !!

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சிகிச்சைக்கு வந்த மன நலம் பாதித்த கேரள இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 7 பேரிடம் கீழக்கரை டிஎஸ்பி தீவிரமாக விசாரித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண். மனநலம் பாதித்த இவர், ஏர்வாடி தர்காவில் கடந்த 2 மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை (நவ.5) ஏர்வாடி தர்கா பகுதியில் உள்ள கழிவறை சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்த சிலர், அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

 

இது குறித்து அப்பெண்ணின் தந்தை பேதக் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் ஏர்வாடி போலீசார் விசாரணையில் 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிந்தது. தனிப்படையினர் சிக்கிய 7 பேரிடம் கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் விசாரித்து வருகிறார்.


Leave a Reply