--- --:--:-- --

விமானப் பயணிகளிடம் இருந்து 30 கிலோ தங்கம் பறிமுதல்

1

திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் சோதனையில் சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு முதல் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சிங்கப்பூர், துபாய், மலேசியாவிலிருந்து வந்த விமானங்களின் பயணிகள் சுமார் 150 பேரின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பல்வேறு பொருட்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதில் சிலர் உடலில் தங்கத்தை செலுத்தி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதன்படி பயணிகளிடம் இருந்து இதுவரை 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் உடலில் மறைத்து தங்கம் கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 15 பயணிகளுக்கும் முழு உடல் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

 

இதற்கிடையே திருச்சி விமான நிலையத்தில் சோதனையும், பயணிகளிடம் விசாரணையும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon