தலைகீழாக குறைந்த தங்கம் விலை..!
ஜூன் மாதம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை ஜூலை மாத முதல் நாளில் அதிரடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்கள் காலை மாலை என இரு வேளையிலும் தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களுமே தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று மட்டுமே தங்கம் விலை காலை மாலை என 2 வேளைகளிலுமே அதிரடியாக குறைந்தது.
நேற்று காலை நிலவரப்படி (ஜூலை 8) தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.106,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. பிறகு மாலையிலும், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கும், சவரனுக்கு ரூ.1040 குறைந்து ஒரு சவரன் ரூ.105,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,040க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.88,320க்கும் விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,00க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,840 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விலையே ரூ.16 ஆயிரம் வரை உச்சம் தொட்ட நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்தை நோக்கி சரிந்து வருகிறது.





