ஜூலை 15-ல் கணக்குகளில் வரவு வைக்கப்படும் வட்டிப் பணம்..!
நாடு முழுவதுமுள்ள 34 கோடி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) கணக்குகளில், தொழிலாளர் பிஎஃப் வட்டியாக மொத்தம் ரூ.1.44 லட்சம் கோடி வரும் ஜூலை 15 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
2025-2026 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி வீதம் 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில்தான் இந்த வட்டித் தொகை கணக்குகளில் வரவு வைக்கப்படும்; ஆனால் இந்த ஆண்டு தொழிலாளர்களின் நலன் கருதி வழக்கத்தை விட முன்கூட்டியே, அதாவது ஜூலை மாதத்தின் பாதியிலேயே வட்டிப் பணம் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





