நீதிமன்ற உத்தரவு: பலத்த பாதுகாப்புடன் அறந்தாங்கி எம்.எல்.ஏ அலுவலகம் இடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகன்குளத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) அலுவலகம், நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டுள்ளது. அறந்தாங்கி ஆர்.டி.ஓ அபிநயா தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில் ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டு இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, அருகில் உள்ள தங்களின் வீடுகளுக்கும் இந்த இடிப்பால் பாதிப்பு வரலாம் என அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த இடிப்பு பணி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





