--- --:--:-- --

புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்..!

02

புதிய ரேஷன் கார்டுகள் 2 அல்லது 3 வாரங்களில் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் உறுதியளித்துள்ளார். முதலமைச்சரின் செயல்பாடுகளை முடக்க சில புனையப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், புதிய ரேஷன் அட்டைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் விநியோகம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

 

இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள் என்ற கேள்விக்கு, மக்களுக்கான பல திட்டங்களை செய்யும் மனசாட்சி உள்ள மக்களாட்சி நடைபெற்று வருகிறது. எந்த கட்சி என்று பாராமல் நாங்கள் தேவையானவற்றை செய்து வருகிறோம் என்றார்.
இந்த விழாவில் மேயர் கலந்து கொள்ளவில்லை என்பதால் மேயர் உடனான மோதல் போக்கு தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், எங்களுக்கு எந்த விதமான பாரபட்சமும் இல்லை. கட்சி பாராமல் நாங்கள் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சில பேர் சில காரணங்களுக்காக புறக்கணித்து சென்றிருக்கலாம். அதைப் பற்றி கூற முடியாது என்றார்.

 

மேலும் முதலமைச்சரின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்பதற்காக சிலர் செயல்படுகிறார்கள். கரூர் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உச்ச நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. தமிழக அரசு பல நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மக்களுக்கான சேவையை செய்து வருகிறோம் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் புனையப்பட்ட குறைகளை கூறி வருகிறார்கள் என்றார்.

Leave a Reply

Right Menu Icon