--- --:--:-- --

முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை – சென்னை மாநகராட்சி

02

முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.கடந்த திமுக ஆட்சியில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், ஸ்டார்ட் அப் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் சென்னையில் 24 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டன.

 

 

இதில் 15 முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் 9 படைப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதல்வர் படைப்பகங்களை, தனியார் நிறுவனம் மூலம் பராமரிப்பதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் 15 முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் 9 படைப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

செயல்பாட்டில் உள்ள முதல்வர் படைப்பகங்களில் பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான பணியாளர்கள் மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon