மாவட்ட ஆட்சியர்களுடன் தனியாக விஜய் ஆலோசனை..!
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாட்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டில் மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இன்று மதியம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் முதலமைச்சர் விஜய் தனித்தனியாக நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த பிரத்யேக சந்திப்பின் போது, தமிழக அரசின் முக்கிய 28 துறைகளின் கீழ் பொதுமக்களுக்காகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், அதன் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அவற்றை விரைந்து முடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து அவர் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.





