--- --:--:-- --

திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்..!

01

ட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தவெக அமைச்சரவையில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அந்தக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது.

 

 

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 480 பேர் கலந்து கொண்டனர்.

 

இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

 

1) இரங்கல் தீர்மானம்

2) 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு துணை நின்ற கூட்டணி கட்சியினருக்கு நன்றி

3) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்

4) வரலாற்று சிறப்புக்குரிய தீர்க்கமான முடிவிற்கு அங்கீகாரம்-இ.யூ.முஸ்லிம் லீக் தலைமைக்கு பாராட்டு.

 

மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய புரவலர்கள், இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள், சர்வ சமய தலைவர்கள் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை வென்றுள்ள த.வெ.க.வின் ஆட்சி அமைவதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், 09.05.2026 அன்று சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீகின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேதகு ஆளுநர் அவர்களிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் த.வெ.க. தலைவர் திரு.ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பு ஏற்க அழைப்பு விடுத்தார். அதன்படி, 10.05.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார்.

 

 

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசில், இ.யூ.முஸ்லிம் லீக் இடம்பெற வேண்டும் என த.வெ.க. சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ., உள்ளிட்டோரும் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் திரு.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் அங்கம் வகிக்க வேண்டும் என தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்.

Leave a Reply

Right Menu Icon