டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மீண்டும் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் அபிஜீத் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மதியம் 1 மணியளவில், திப்கே தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆதரவாளர்கள் திரண்டு வரவுள்ளனர்.
இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதுடன், சி.சி.டி.வி. கேமராக்களும் பல்வேறு இடங்களில் கண்காணிப்புக்காக வைக்கப்பட்டு உள்ளன.





