--- --:--:-- --

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு – அமைச்சர் நிர்மல்குமார்

3

மிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். மின் கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக அரசின் ஒப்பந்தத்தால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை தன்னிச்சையாக அறிவித்து உயர்த்தி வருகிறது.

 

 

இந்தாண்டு மின் கட்டணம் உயர்வு தொடர்பாக முதலமைச்சர் விஜய் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பரிசீலித்து முடிவை தெரிவிப்பார் என்றார். மேலும் மின் கட்டணத்தை அரசே ஏற்குமா என்பது நிதித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை ஆறு சதவீதம் அளவிற்கு ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள திமுக அரசு ஒப்பந்தம் போட்டிருந்தது.

 

 

அதுவே தற்போது மின் கட்டணம் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.மின் கட்டண உயர்வு 3.16 சதவீதமாக கடந்தாண்டு இருந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த ஆண்டுக்கான உத்தரவு இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon