காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது கார்த்தி என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் வீட்டின் முன்பகுதி தீப்பற்றி எரிந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான கார்த்தியைப் பிடிக்கத் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




