தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏன்? மின்வாரியம் விளக்கம்
உள்ளூர் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பி பழுதுகள் உள்ளிட்ட காரணங்களால் சில பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாகவும் சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்த புகார்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், மின்வாரியம் இதுபற்றிய விளக்கத்தை அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் மின்தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின்தடை ஏற்படுவதாகவும் அதனைச் சரிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.





