--- --:--:-- --

காக்ரோச் ஜனதா கட்சி: ஃபாலோயர்களால் திணறும் இன்ஸ்டா தளம்..!

9

ச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்று விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளைஞர்கள் குறித்து தான் அவ்வாறு கூறவில்லை என்று அவர் உடனடியாக விளக்கம் கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. இருந்தாலும் அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஒரு புதிய கட்சிக்கான பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதுதான், ‘காக்ரோச் ஜனதா கட்சி’. ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக ஊடகப் பிரச்சார பணியாளர் அபிஜித் தீப்கே என்பவர் தான் இந்த கட்சியை நிறுவியுள்ளார். வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று விமர்சித்த நிலையில் இதனை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளாராம்.

 

 

மதச்சார்பற்றா, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி இதுதான் இந்த கட்சியின் கொள்கை. இந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை இந்த கட்சியில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள். தொடங்கிய 4 நாட்களுக்குள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். மேலும், இதுவரை 12 மில்லியன் ஃபாலோவர்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

2 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் பெரும் அலையை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மஹூவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்றவர்களும் இதில் இணைந்திருப்பதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க-வின் இன்ஸ்டா பக்கத்தை சுமார் 8.7 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

 

 

காங்கிரஸை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். ஆனால், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ கணக்கை 4 நாட்களில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்த கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதனை அபிஜித் தீப்கே புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon