அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெறுமா? – ஆதவ் அர்ஜுனா
அமைச்சரவையில் அ.தி.மு.க இடம் பெறுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளித்தார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர தி.மு.க – அ.தி.மு.க. இணைந்து செயல்பட்டன. தி.மு.க.வுடன் இணைந்து பின்புற வாசல் வழியாக முதலமைச்சராக இ.பி.எஸ் கடைசி நிமிடம் வரை எல்லா திட்டங்களையும் உருவாக்கினார்.
நல்ல எதிர்க்கட்சியாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். அ.தி.மு.க.வை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக கட்சியை காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க.வை நாங்கள் தோழமையோடு தான் அணுகுகிறோம் என்றார்.





