அமைச்சரவையில் இணைய வி.சி.க, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு..!
த.வெ.க தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இணைய வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
முதல்கட்டமாக முதல்வர் ஜோசப் சி. விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது.





