10ஆம் வகுப்பு ரிசல்ட்.. புதுக்கோட்டைக்கு முதலிடம்!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாவட்டமாக முதலில் சிவகங்கையும், அடுத்தடுத்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமதநாபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளது.
13,292 மாற்றுதிறனாளிகள் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் 11416 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 85.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகளின் எண்ணிக்கை 370ஆகவுள்ள நிலையில், அதில், 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 95.68 சதவீதம் தேர்ச்சி ஆகியுள்ளது.





