--- --:--:-- --

இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

4

மிழ்நாட்டில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், வடகிழக்கு தமிழகம் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

 

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான மத்திகிரி, ஜூஜூவாடி, பேகேபள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் கொடைக்கானல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2 மணி நேரம் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

 

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், திருவப்பூர், மச்சுவாடி, திருக்கோகர்ணம், போஸ்நகர், மேட்டுப்பட்டி, மாலையீடு உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான பாண்டியன் நகர், வடகரை, செங்குளம், கரிசல்பட்டி, மறவன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Leave a Reply

Right Menu Icon