--- --:--:-- --

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் – தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு

9

மிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகம் கட்சித்தலைவர் விஜய் பதவியேற்றுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று இருந்த தவெக அதன் பிறகு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்தி ஆட்சியமைத்து இருக்கின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அதன் பிறகு முதல் வேலையாக தமிழ்நாட்டில் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூட விஜய் உத்தரவிட்டுள்ளார்.

 

 

.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட விஜய் உத்தரவிட்டுள்ளார். தவெகவின் தேர்தல் அறிக்கையிலேயே டாஸ்மாக் கடைகளை அகற்றுவோம் என கூறியிருந்தனர். அதன்படி தற்போது முதலமைச்சராக பதவியேற்றவுடன் விஜய் பள்ளி ,கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகில் இருக்கும் சுமார் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

 

 

இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. முதலமைச்சராக பதவியேற்றவுடன் ஆக்கபூர்வமான விஷயத்தை விஜய் செய்து வருவதாக பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் விஜய்யை மனதார பாராட்டி பேசியிருக்கிறார். டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய்க்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

 

தமிழ்நாட்டில் இருக்கும் குடும்பங்களின் நலனுக்காக விஜய்இத்தகைய நல்ல விஷயங்களை செய்துள்ளார். இதுபோல தமிழ்நாடு குடும்ப நலனுக்காக விஜய் தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கின்றார். தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமல்லாமல் பலரும் விஜய்யின் இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

ஏனென்றால் டாஸ்மாக் கடைகளின் மூலம் பல பிரச்சனைகள் நடைபெறுகின்றது. குறிப்பாக குடும்ப பெண்கள் பெரிதும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளால் பல பிரச்சனைகள் உருவாககி வருகின்றது. இதையெல்லாம் தடுத்து நிறுத்தவே விஜய் முதல்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு இருக்கின்றார்.

மது பழக்கத்தால் பலர் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அதன் காரணமாக அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே மதுவை அகற்ற வேண்டும் என தவெக தேர்தல் வாக்குறுதிகளில் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் தான் முதலமைச்சர் விஜய் பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளின் கணக்கெடுப்பை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அந்த கணக்கெடுப்பின் முதல் கட்டமாக தற்போது 717 கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இன்னும் பல டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் எனவும் தெரிகின்றது. இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. இதை தான் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டி பேசியிருக்கிறார். இதுபோல விஜய் தொடர்ந்து தமிழ்நாடு குடும்பங்களுக்காக நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றார் தமிழிசை.

 

இந்நிலையில் விஜய்யின் இந்த உத்தரவு குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் மது பழக்கத்தால் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்த குடும்பத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக மது பழக்கத்திற்கு அடிமையானவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இதனால் பல பிரச்சனைகளையும் துன்பங்களையும் சந்தித்து வருகின்றனர். அதையெல்லம் கருத்தில் கொண்டு தான் மதுவை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் முதலமைச்சர் ஆனதும் முதல் வேலையாக டாஸ்மாக் கடைகளை அகற்றி வருகின்றார். முதலமைச்சர் விஜய்யின் இந்த செயல் தான் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon