கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000, ரூ.2000 டோக்கன்களை வாக்காளர்களுக்கு விநியோகித்து வந்த அதிமுகவினரை பிடித்த தி.மு.க. நிர்வாகிகள் டோக்கன்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.