வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்தது குற்றச்சாட்டு.. ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு..!
வேட்புமனுவில் சொத்து விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் தேவராஜன், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது அளிக்க வேண்டிய சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ள உயர்நீதிமன்றம் விரைவில் இதுகுறித்து தீர்மானம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




