--- --:--:-- --

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை விட டாஸ்மாக் கடைகள் அதிகம்

6

மிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை (PHCs) விட டாஸ்மாக் கடைகள் அதிக அளவில் இருக்கும் சூழலை உருவாக்கியதற்காக பா.ஜ.க பிரமுகர் சரத்குமார் திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போது பா.ஜ.க. பிரமுகருமான சரத்குமார், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சாத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏலாயிரம்பண்ணையில், நயினார் நாகேந்திரனுடன் இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சரத்குமார், தமிழகத்தில் ஒவ்வொரு 30,000 பேருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ள நிலையில், ஆனால் ஒவ்வொரு 15,000 பேருக்கும் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. மருந்துகளைப் பெறுவது கடினமாக உள்ளது, ஆனால் மதுபான பாட்டில்களைப் பெறுவது மிகவும் எளிதாக உள்ளது.

 

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசுகள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியுள்ளது. இந்த 5 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது, யாருக்காக, எந்தத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக திமுக அரசு கூறுகிறது. ஆனால், அது எந்த ஒரு தொழில் பிரிவையும் அமைக்கவில்லை, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பேசினார்.

 

Leave a Reply

Right Menu Icon