--- --:--:-- --

திருப்பூரில் தினேஷ்குமார் வேகம்! குஜராத்திகள், ஜமாத் என வாக்கு சேகரிப்பு

தினேஷ்குமார்

ஜமாத் அமைப்பினரை சந்தித்து தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்குமார் வாக்கு சேகரித்தார்.

திருப்பூர்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார், குஜராத் மக்கள் முதல் ஜமாத் நிர்வாகிகள் வரை அனைவரையும் நேரில் சந்தித்து ‘ஆதரவு வேட்டை’ நடத்தி வருகிறார். “பெண்கள் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் அச்சாணி” என முழங்கி, அவர் மேற்கொண்ட பிரச்சாரம் தொகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருப்பூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்த தினேஷ்குமார், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அவசியம் குறித்து விளக்கி ஆதரவு கோரினார். அவருடன் திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவியும் கைகோர்த்து நின்றது, கூட்டணி பலத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. “அனைத்து சமுதாய மக்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்; வெற்றி உறுதி” என பள்ளிவாசல் நிர்வாகிகள் கொடுத்த உற்சாகம், திமுக முகாமிற்கு புதுத்தெம்பை அளித்துள்ளது.


குஜராத் குடும்பங்களின் வரவேற்பு!

தனது பிரச்சாரப் பயணத்தை கருவம்பாளையம் மற்றும் அனைப்பாளையம் பகுதிகளில் துவங்கிய தினேஷ்குமார், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் ஹைலைட்டாக அமைந்தது, திருப்பூரில் வசிக்கும் குஜராத் மக்களான கைலாஷ் குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அவர் சந்தித்ததுதான். மொழி எல்லைகளைக் கடந்து, அவர்கள் தினேஷ்குமாருக்கு அளித்த அன்பான வரவேற்பும், வாழ்த்துகளும் அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Dineshkumar
தொழில் துறை பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் தினேஷ்குமார்.

பிரச்சாரத்தின் ஊடே பேசிய தினேஷ்குமார், திமுக அரசின் சாதனைகளை அடுக்கினார்: “பெண்கள் முன்னேற்றம் என்பது வெறும் வார்த்தை அல்ல, அதுவே சமூகத்தின் முன்னேற்றம்! திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று பெண்களின் கைகளில் பொருளாதார வலிமை உயர்ந்துள்ளது.

அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எனப் பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் இன்று சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வலுவானால் நாடும் வலுவாகும் என்பதை உணர்ந்து எங்கள் அரசு செயல்படுகிறது” என்றார் வேட்பாளர் என். தினேஷ்குமார்.


விறுவிறுப்பான தெற்கு தொகுதி களம்!

வீதி வீதியாகச் சென்ற வேட்பாளருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். “திருப்பூரின் வளர்ச்சிக்கும், தொழில்துறையின் முன்னேற்றத்திற்கும் உதயசூரியன் சின்னமே நிரந்தரத் தீர்வு” என தினேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

மத நல்லிணக்கம், பிற மாநில மக்களின் ஆதரவு, மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி அவர் நடத்தி வரும் இந்தப் பிரச்சாரம், திருப்பூர் தெற்கு தொகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மொத்தத்தில், திருப்பூரில் திமுகவின் தேர்தல் களம் ‘ஜெட்’ வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon