தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஏப்ரல் 06) நிறைவடையும் நிலையில், பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர்.
அவினாசி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கிறார்.
மயிலாப்பூர்: முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார்.
கோவை வடக்கு: பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் மனுத்தாக்கலின் போது ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உடனிருக்கிறார்.
மதுரை தெற்கு: ராம ஸ்ரீநிவாசன் மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்கிறார்.
சாத்தூர்: நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்யும் போது மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துகொள்கிறார்.
தேசியத் தலைவர்களின் வருகையால் அந்தந்தத் தொகுதிகளில் பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.





