--- --:--:-- --

சட்டமன்ற தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

9

மிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க 2 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளும் படிப்படியாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதனிடையே ஆளும் தி.மு.க சனிக்கிழமை கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டது.

 

 

தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, தளி, திருத்துறைப்பூண்டி (தனி), ஸ்ரீவில்லிப்புத்தூர், திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

 

வேட்பாளர்கள் விவரம்

 

தளி – ராமச்சந்திரன்
திருத்துறைப் பூண்டி (தனி) – மாரிமுத்து
திருப்பூர் வடக்கு – ரவி
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – மகாலிங்கம்
பவானிசாகர் (தனி) – சுந்தரம்

 

Leave a Reply

Right Menu Icon